Wednesday, December 28, 2011

Vijay's Yohan Adhyayam Ondru Photos


Vijay IN Yohan Adhyayam Ondru Photos
Click on the photos and download it freeee....




Tuesday, December 27, 2011

இளமை குன்றாத ....ஜன.கன.மன. தேசிய கீதத்திற்கு இன்று வயது 100


புதுடில்லி: ஜன..கன..மன என்று இந்திய தேசீய கீதம் நம்நாட்டில் முதன் முதலாக முழங்கியதன் 100-ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின் தேசிய கீதம் முக்கியத்துவம் பெறுகிறது.
நூற்றாண்டு கண்ட தேசிய கீதம் ,இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இந்திய தேசிய கீதமாக, நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன.கன.மன கீதம் அங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்னரே இந்திய தேசிய கீதம் , ஓங்கி ஒலிக்கப்பட்டுவிட்டது. முதன்முதலாக கடந்த 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போதே ஜன.கன .மன ஹதி. நாயக. ஜேயஹே... என துவங்கும் தேசிய கீதம் பாடப்பட்டது. மொழி, இனத்தால் வேறுபட்டாலும் ஒற்றுமையில் நாம் இந்தியர் அதனை இப்பாடல் வலியுறுத்துகிறது. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையால் இந்தியர்கள் என அடை‌‌யாளம் காண , நாட்டில் எந்த அரசு மற்றும் தனியார் விழாக்களில் இந்திய தேசிய கீதம் இன்றளவும் ஒலிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாட்டிற்கும் அந்நாட்டு தேசிய கீதம் , ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் எப்போதும் ஒலிக்கும் ‌மந்திரம் ஆகும். அது போல் இந்தியர்களாகிய நாம் நமது தேசப்பற்றை ‌காண்பிக்க ஜன..கன.மன தேசிய கீதம் , ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Monday, December 26, 2011

Vijay Nanban Audio Launch Photos

Vijay Nanban Audio Launch Photos

Click on the Image and download it..

 

Sunday, December 25, 2011

Thuppakki Shooting Spot Stills

Thuppakki Shooting Spot Stills

Click on the image and download  it freee...




 

Saturday, December 24, 2011

பாசத்திற்கு இன்னொரு பெயர் கபாலி

பாசத்திற்கு இன்னொரு பெயர் கபாலி
திருச்சியில் இருந்து வயலூர் போகும் வழியில் இருக்கிறது சோமரசம் பேட்டை. இந்த வழியாக போகும்போது கண்ணில்படுகிறது ஒரு போஸ்டர். ஒரு நாயின் படம் பெரிதாகப்போடப்பட்டு, எங்கள் ஆருயிர் கபாலிக்கு கண்ணீர் அஞ்சலி,இங்ஙனம் சலூன் நண்பர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

காசில்லாத மனிதனை தூசுக்கு சமமாக மதிக்கும் "ஈரமுள்ள' மனிதர்கள் நிறைந்த இந்த உலகில்,ஒரு நாய் இறந்ததற்காக " போஸ்டர் 'அடித்து தன் துக்கத்தை தெரிவிக்கும் ஆட்களும் உலகத்தில் இருக்கிறார்களா என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது. யார் அவர் என்று விசாரித்ததில் கிடைத்த விவரத்தால் இதயம் கனத்தது.

"என் பெயர் பழனிவேலுங்க, நான் சோமரசம் பேட்டையை அடுத்துள்ள அல்லித்துறையில் குடியிருக்கேன், இருபது வருடமா முடிவெட்டுறதுதான் என் தொழில். இருபது வருடத்திற்கு முன்னால் தினக்கூலிக்கு முடி வெட்டிவிடும் ஆளாய்த்தான் இருந்தேன். என் கபாலி (நாய்) வந்த நேரம் நான் படிப்படியா முன்னேறி, இன்னைக்கு சொந்தமா முடிவெட்டும் கடைவைத்து, இரண்டு பேருக்கு சம்பளம் கொடுக்கிறேன்''.

என் கபாலி நான் பெக்காத பிள்ளைங்க, தெரு நாய் ஒன்று பிரசவித்து போட்ட குட்டியில ஒண்ண எடுத்துட்டு போய் வீட்டிலே வளர்த்தேன். அதுதான் கபாலி. அது எனக்கு மட்டுமில்ல எங்க அம்மா, மனைவி உள்ளிட்ட குடும்பத்துல அனைவருக்கும் ரொம்ப செல்லம். எங்கம்மா செவ்வாய், வெள்ளி விரதம் இருந்தா, அதுவும் விரதம் இருக்கும். என்னதான் கெஞ்சினாலும் சாப்பிடாது. சாயந்திரம் விரதம் முடிச்சு சாப்பிடும்போதுதான் சாப்பிடும். நான் காலையிலே 6 மணிக்கெல்லாம் கடையை திறக்கவந்திருவேன். வரும்போது கபாலி முகத்தை பார்த்துட்டுதான் வருவேன். அதுவும் என்னை வாஞ்சையோடு வழியனுப்பி வைக்கும். எப்பவாவது அசந்து படுத்திருக்கும்போது அதை எழுப்ப வேண்டாமேன்னுட்டு நான் கடைக்கு வந்திடுவேன். அன்னைக்கு கபாலி எழுந்ததும் என்னைத் தேடும், கடைக்கு போனது தெரிந்ததும், ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருக்க கடைக்கு ஒரே ஒட்டமா வந்து என்னை பார்த்துட்டு, கண்ணுல தன்னுடைய சிரிப்பைக் காட்டிட்டு திரும்ப போயிடும்.

உடம்புக்கு முடியாத நிலையில் நான் கடைக்கு வந்தால், கடையின் வாசலிலேயே நின்னு நான் இருமுவதை கவலையோடு பார்க்கும். கடையை பூட்டுறவரை கூட இருந்து கூட்டிட்டு போகும். உடம்பு சரியாகி நான் பழையபடி சிரிக்கும்போதுதான், கபாலியின் கண்ணிலேயும் சிரிப்பும், நிம்மதியும், சந்தோஷமும் தென்படும். யாராவது விருந்தாளிங்க வந்துட்டு திரும்ப ஊருக்கு போகும்போது கபாலியும் வழியனுப்ப பஸ் நியைத்திற்கு வந்துவிடுவான். எதற்கும் ஆசைப்படட்டதுல்ல, எதை கொடுத்தாலும் சாப்பிடுவான். எங்கள அப்படி பார்த்துக்கிட்டான், பாதுகாத்திட்டுருந்தான்... சொல்லும்போதே குரல் கம்முகிறது. கண்ணில் நினைவு நாடாக்கள் காரணமாக கண்ணீர் கசிகிறது.

இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, 17 வருஷமா எங்க குடும்பத்துல ஒரு செல்லமா இருந்தவன். திடீர்னு முடியாம படுத்துட்டான், நாங்க நிறைய மருந்து கொடுத்து பார்த்தோம். "இதுக்கான' டாக்டரை வீட்டிற்கே கொண்டுவந்து காமிச்சோம். ஆனால் அவர் சொன்னாரு, ஒரு நாயோட ஆயுசு 14 வருஷந்தான்; உங்க அன்பு காரணமாக கூடுதலாக மூணு வருஷம் வாழ்ந்திருச்சு, அதுனால இனி அது போற காலம்தான், எந்த மருந்தும், மாத்திரையும் வேலை செய்யாதுன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

அன்னையிலேருந்து மூணு நாள் கபாலி பச்சத்தண்ணீர் கூட சாப்பிடாம படுத்த படுக்கையாக கிடந்தான், நாங்களும் யாரும் சாப்பிடலை, எல்லோரையும் முழிச்சு, முழிச்சு பார்த்தான், எங்களப் பிரியப்போற வேளை வந்திருச்சுன்னு தெரிஞ்சுகிட்டானோ, என்னவோ, அவன் கண்ணுல இருந்து கண்ணீர் தாரை, தாரையா வழிஞ்சு ஒடுது, எல்லாரும் பார்த்துட்டு இருக்கும் போது அவனோட ஜீவன் அடங்கிடுச்சு.

கதறி, கதறி எங்களாலே அழ முடிஞ்சுதே தவிர கபாலிய காப்பாத்த முடியலை. வீட்டு வாசல்லேயே அடக்கம் பண்ணிட்டு அங்க ஒரு செடி நட்டு வளர்த்துட்டு வர்ரேன். கபாலி வந்த பிறகு எங்களுக்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கு. பணம், பொருளைவிட பாசம்னா என்னான்னு கபாலிதான் கத்துக் கொடுத்தான். அவனுக்காக அஞ்சலி செலுத்தி என்னால போஸ்டர்தான் ஒட்டமுடிஞ்சுது.

கபாலி இறந்ததுல இருந்து என்னோட பலமே போன மாதிரி இருக்கு, இறந்து எவ்வளவோ நாளாயிடுச்சு, ஆனாலும் நான் கடையில வேலை பார்க்கும்போது அவ்வப்போது என்னையுமறியாமல் எட்டிப்பார்க்கிறேன். என் கபாலி என்னைத் தேடி வந்திருக்காணான்னு என் கண் இன்னமும் தேடத்தான் செய்யுது, என்று கலங்கிய கண்களுடன் பழனிவேலு சொல்லி முடித்தபோது அவரது கண்கள் அதிகமாகவே கலங்கியிருந்தது, கூடவே நமது கண்களும்.

ஈரோடு வரலாறு




ஈரோடு வரலாறு
ஈரோடு வரலாறு
பருத்தி விளையும் பூமியில் அமைந்துள்ள ஈரோடு நகரம், பெரும்பாளையம் கால்வாய் மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகிய இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த பகுதி கி.பி.1000 முதல் கி.பி.1275 வரை சோழ மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது தாராபுரம் தலைநகராக இருந்தது. பின்னர் இந்த பகுதி கி.பி.1276ல் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. இவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் காளிங்கராயன் கால்வாயை, வீரபாண்டிய மன்னன் வெட்டினான். பாண்டியர்களைத் தொடர்ந்து, முஸ்லிம்களும் அதன் பின்னர் மதுரை நாயக்கர்களும் இப்பகுதியை ஆண்டுள்ளனர். பின்னர் ஐதர் அலியும் திப்பு சுல்தானும் ஆட்சி செலுத்தினர். 1799ல் பிரிட்டிஷாரிடம் திப்பு சுல்தான் தோல்வி அடைந்தபோது, இந்த பகுதி, பிரிட்டிஷார் வசம் சென்றது. ஐதர் அலியின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரில் 300 வீடுகள் இருந்தன. சுமார் ஆயிரத்து 500 பேர் வசித்த இந்த நகரைச் சுற்றி கோட்டையும் 4 ஆயிரம் போர் வீரர்கள் தங்குவதற்கான பாசறைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

வடக்கில் காவிரியும் கிழக்கில் காளிங்கராயன் கால்வாயும் அமைந்திருக்க இந்த நகரைச் சுற்றி தென்னந்தோப்புகளும் வளமான நன்செய் நிலங்களும் அமைந்திருந்தன. ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற மராட்டிய, மைசூர் மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகளால் இந்த ஊர் சீரழிந்து சின்னாபின்னமாகியது. இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டதும் அமைதி ஏற்பட்டு, மக்கள் மீண்டம் இப்பகுதியில் வந்து குடியேற ஆரம்பித்தனர். ஓராண்டிற்குள் 400 வீடுகள் கட்டப்பட்டு, சுமார் 2 ஆயிரம் பேர் குடியேறினர். 1807ம் ஆண்டு இந்த பகுதியிலிருந்து ராணுவம் வெளியேறியது. 1877ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பணியாக, இந்த பகுதியில் மீண்டும் கோட்டையைக் கட்டும் பணி தரப்பட்டது.

இருப்பிடம்:
கோயம்புத்தூருக்கு கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஈரோடு நகரம். காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த நகரம், 76.21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. 1981ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரின் மக்கள் தொகை 2.48 லட்சமாக இருந்தது. ஈரோட்டில் இரண்டு பழமையான கோயில்கள் உள்ளன. ஒன்று சிவன் கோயில்; மற்றது விஷ்ணு கோயில். ஈரோடு பகுதியில் நிலப்பரப்பு, கருப்பு நிற களிமண்ணாக காட்சி அளிக்கிறது. சில பகுதிகளில் மணல் பரப்பு, கற்கள், கூழாங்கற்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. பொதுவாக கருப்பு மற்றும் செம்மண் என இருவகை நிலப்பரப்பு காணப்படுகிறது. சுண்ணாம்பு கற்களும் அதிக அளவில் கிடைக்கிறது.தமிழகத்தின் பெரும்பாலான நகர்களைப் போலவே ஈரோடு நகரமும் வெப்பம் நிறைந்ததாக,
வறட்சியானதாகவே இருக்கும். சராசரி வெப்ப நிலை 80 டிகிரி பாரன்ஹீட் முதல் 96 டிகிரி
பாரன்ஹீட் வரை இருக்கும். ஆண்டின் மொத்த மழை அளவு 100 மி.மீ., ஈரோடு நகரின் பிரப் ரோடு மற்றும் நேதாஜி சாலைகளில் வர்த்தக நடவடிக்கை சுறுசுறுப்பாக இருக்கும். பிரதான தொழிற்சாலைகள் அனைத்தும் நகருக்கு வெளியே, பெருந்துறை மற்றும் சத்தியமங்கலம் சாலைகளில்தான் அமைந்துள்ளன. நகரில் பெரும்பாலும் எண்ணெய் மற்றும் அரிசி ஆலைகள், அவை தொடர்பான வர்த்தகம், பொறியியல் பணிகள், ஆட்டோமொபைல் மற்றும் விசைத்தறிகள் உள்ளன. இங்கு சாயப்பட்டறைகளும் உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது முக்கிய நகரமாக ஈரோடு கருதப்படுகிறது. ஆண்டிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்த மாவட்டத்தில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ், இன்ஜினியரிங், ஹோசரிஸ் ஆகியவற்றிற்கு ஈரோடு பெயர் பெற்றதாகும். ஐ.டி. நிறுவனங்கள் இங்கு அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நல்ல காலநிலையும், சிறந்த தொழில் கட்டமைப்பும், கல்வி, மருத்துவ மையங்கள் நிறைந்த நகரமாக ஈரோடு விளங்குகிறது.


பொருளாதாரம் :
ஈரோட்டில் வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது. இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது. இதன் அருகில் முட்டையைப் பொடியாக்கி பேக்கிங் செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது. ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.‌ ஈரோடு மாவட்டம் மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களுக்கான முக்கிய சந்தையாகும். மஞ்சளானது துணிகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளானது ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழ்நாட்டு, கர்நாடக மாவட்டங்களிலிருந்தும் வருகிறது. 'ஊத்துக்குளி வெண்ணெய்'யும', 'காங்கேயம் காளை'களும' புகழ் பெற்றவை.

தொழில்கள்:  
பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.
கைத்தறி - நெசவுத் தொழில் பெருந்துறை, தாராபுரம், ஈரோடு, பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு டையிங் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. சென்னிமலை, பவானி ஆகிய இடங்களில் ஜமுக்காளம், போர்வைகள், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது. கோபிச்செட்டிப் பாளையம், தாளவாடி, சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு பெயர்பெற்றது. இங்கு பருத்திப் புடவைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கி, வேட்டிகள் ஆகியன தயாரிக்கப் படுகின்றன.
சர்க்கரை - சத்திநகர், சித்தோடு, பெருந்துறை, கவுந்தபாடி முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மரம் அறுப்பு - சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையத்தில் மரம் அறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மீன்பிடிப்பு - ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. தாலக்குளத்தில் மீன் குஞ்சுகள் விற்கப்படுகின்றன. பவானிசாகர் அணையிலும், உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு 'பவானிகெண்டை' என்றே பெயர் உள்ளது. ஏரி மீன்பிடிப்பில் ஓடத்துறை ஏரி, தலைக்குளம் ஏரியில் மீன்பிடிப்பு நடக்கிறது. இங்கு இறால் மீன் பக்குவப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. செம்படவ பாளையத்தில் கையினால் மீன்வலை பின்னும் நிலையம் ஒன்று உள்ளது.
எண்ணெய் - எண்ணெய் சந்தையைப் பொறுத்த அளவில் கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்த படியாக, இங்குள்ள காங்கேயம் தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.
கால்நடை வளர்ப்பு - ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரியமாகவே கால்நடை வளர்ப்பு சிறந்த முறையில் நடந்து வருகிறது. தமிழக மாடு வகையில் 'காங்கேயம்' உலகப் புகழ்பெற்றது. இது போலவே பர்கூர் இனக் காளைகளும் தற்போது அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தாளவாடி, பர்கூர், அந்தியூர் பகுதிகளில் குறும்பை ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. கண்ணபுரத்தில் பெரிய மாட்டுச் சந்தையும்; அந்தியூரில் குதிரைச் சந்தையும் ஆண்டுதோறும் கூடுகின்றன.

காட்டுவளம் :

இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. காட்டின் மொத்தப் பரப்பளவு 2,42,953.28 ஹெக்டேர்களாகும். தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது. இவற்றை 4 ஆக பிரித்துள்ளனர். அவை: சத்தியமங்கலம் சரகம், தல்ல மலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் ஆகியவையாகும். தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்திலிருந்து கிடைக்கிறது. சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது. மேட்டூர் சந்தன எண்ணெய்த் தொழிற்சாலைக்கு இங்கிருந்தே மரங்கள் செல்கின்றன. அந்தியூர், பர்கூர் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர்ப் பகுதிகளில் மூங்கில் மரமும் அதிகமாக வளர்கின்றன. இவை காகிதத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இம்மாவட்டத்திலுள்ள காடுகளில் வேங்கை, கருங்காலி. ஈட்டி, மருது போன்ற பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன.

சென்‌னிமலை முருகன் கோயில்:
Hotel image
சென்னிமலைக்கு போவதற்கு ஈரோட்டிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னிமலையின் அடிவாரத்தில் ஊர் உள்ளது. ஊரின் பெயரும் சென்னிமலைதான். சென்னிமலை அடுக்கடுக்காக உயர்ந்து செல்கிறது. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு. அடிவாரத்தில் காவல் தெய்வமாக இடும்பன் காட்சி யளிக்கின்றார். இம்மலைத் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன. மலையின் தென்மேற்குச் சரிவில் மாமங்க தீர்த்தம் உள்ளது. மற்றும் காணாச்சுனை என்னும் தீர்த்தமும், சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன. மலையின் வடபக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சுப்பிரமணிய தீர்த்தத்திலிருந்து குழாய்கள் மூலம் மலையுச்சி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலை கடல் மட்டத்திலிருந்து 1279 அடி உயரத்தில் உள்ளது. எனவே களைப்பாறிச் செல்ல மண்டபங்கள் இருக்கின்றன. திருக்கோபுரவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. முருகக் கடவுளின் பெயர்: சென்னிமலை நாதர்; மூலவருக்கருகிலேயே மார்க்கண்டேசுவரரும், இமயவல்லியும் உள்ளனர். அருகிலேயே வள்ளி, தெய்வானைக்குத் தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 'அகத்தியர்' என்கின்றனர். இக்கோவிலின் மகாமண்டபத் துண்களில் 7ஆம் நுற்றாண்டில் திருப்பணி செய்த முத்துவசவய்யன் மற்றும் மைசூர்மன்னர் தேவராச உடையார், மனைவி ஆகியோர் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் ஒரு குகை காணப்படுகிறது. அதன் அருகில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இக்குகையை 'சன்னியாசி குகை' என்று மக்கள் அழைக்கின்றனர்.
சங்கமேஸ்வரர் கோயில்:
Hotel image
சங்கமேஸ்வரர் கோவில் பவானி என்னும் ஊரில் உள்ள ஒரு கோயில் ஆகும். பவானி ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ளது. இறைவன் பெயர் சங்கமேஸ்வரர், இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகை. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் பெயர் பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.
பண்ணாரி அம்மன் கோயில்:
Hotel image
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் துண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.
பவானி சாகர் அணை:
Hotel image
மேட்டுப்பாளையத்திலிருந்து வடகிழக்கில் 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் பவானி நிதியின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. சினிமாக்காரர்களால் சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்பட்ட கோபியைத் தாண்டி சத்தியமங்கலம் வழியாக பவானிசாகர் வரையிலும் பசுமைப் பயணம். கர்நாடகாவிலிருந்து வரும் பவானி ஆறும் மேற்குத் ‌தொடர்ச்சி மலையிலிருந்து வரும் மெய்யாறும் சேர்ந்துதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பவானி சாகர் அணை தண்ணீராகக் காட்சி தருகிறது. அணையைச் சுற்றிலும் மலை.

சிவன்மலை முருகன் கோயில்:
Hotel image
காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் சிவன்மலை அமைந்துள்ளது. இம்மலையைப் பொதுமக்கள் வலம் வருவது உண்டு. பாதி வழியில் பரமேஸ்வரன் கோவிலும் உண்டு. இங்கு அனுமார் சந்நிதியும் உண்டு. மலையில் படிக்கட்டுகள் உண்டு. இளைப்பாறும் மண்டபமும் காணப்படுகிறது. மலைமீது குமரனுக்கும் தனிக் கோவில் காணப்படுகிறது. தொட்டில் மரம் அருகே நஞ்சுண்டேசுவரரும், பர்வதவர்த்தியும் காட்சி தருகின்றனர். திருச்சந்நிதியில் முருகப்பெருமான், வள்ளி நாச்சியாரோடு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளார். தைப்பூசத் திருவிழா - இங்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும்.