
சென்னை, பிப். 11: பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள மத்திய பாதுகாப்பு படை போலீஸ் தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி உடல் தகுதித் தேர்வு தொடங்க உள்ளதாக ஆணையத்தின் தலைவர் என்.கே. ரகுபதி தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
நாடு முழுவதும் எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுத எல்லை காவல் படை உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படைகளுக்காக 53 ஆயிரத்து 200 போலீஸôர், பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு முன்பு அந்தந்த மத்திய காவல் படை நிறுவனங்களே தங்களுக்குத் தேவையான ஆள்களை தேர்வு செய்து வந்தன. நக்ஸல் பாதிப்பு அதிகம் உள்ள பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸல் பாதுகாப்புப் படைக்கென 11 ஆயிரத்து 231 பேரும், எல்லை பாதுகாப்பு படைக்காக 5 ஆயிரத்து 947 பேரும் இப்போது தேர்வு செய்யப்பட உள்ளவர்களில் அடங்குவர். தமிழ்நாட்டுக்கென 1,827 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு கட்டணம் ரூ. 50: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதில் இருந்து 23 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) 26 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். தேர்வு கட்டணம் ரூ. 50.
இந்த பணத்தை தபால் அலுவலகங்களில் தபால் முத்திரைக் கட்டணமாக (இதஊ நபஅஙட) செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர், அனைத்து வகுப்பு பெண்கள் ஆகியோர் தேர்வுக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பு ஆண்கள் 162.5 செ.மீ. உயரமும், மற்ற பிரிவு ஆண்கள் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ உயரமும், ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பு பெண்கள் 150 செ.மீ. உயரம் இருந்தால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் வரும் மார்ச் 4-ம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: மண்டல இயக்குனர், தென் மண்டலம், பணியாளர்கள் தேர்வாணையம், ஈ.வி.கே. சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இணையதளம் வாயிலாக...: விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.ள்ள்ஸ்ரீள்ழ்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் (ஜ்ஜ்ஜ்.ள்ள்ஸ்ரீ.ர்ய்ப்ண்ய்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) என்ற இணையதள முகவரியில் இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் பண அட்டை (க்ங்க்ஷண்ற்ஸ்ரீஹழ்க்) மூலம் செலுத்தலாம். மற்ற வங்கி பண அட்டைதாரர்கள் பாரத ஸ்டேட் வங்கியில் செலான் எடுத்து அந்த செலான் எண்ணை குறிப்பிட வேண்டும்.
தேர்வுகள்: முதல் கட்டமாக இந்தியா முழுவதும் வரும் மார்ச் 14-ம் தேதி உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வை பொறுத்தவரை 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் பாதுகாப்புப்படை, அசாம் படைப்பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மே 1-ம் தேதியும், இதர பாதுகாப்பு படைகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஜூன் 5-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு... 94451 95946 என்ற செல்போன் எண்ணிலோ, 044-2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் ரகுபதி.